பிரதமரின் உரை குறித்து சுதந்திரக்கட்சி சீற்றம்

” பிரதமர் பதவியை வகிக்கும் ஒருவர் ஆற்றுவதற்கு பொருத்தமற்றதொரு உரையையே மஹிந்த ராஜபக்ச ஆற்றியுள்ளார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையை அவருக்கு யார் எழுதிக்கொடுத்தார்களோ என தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் ஒருவர் ஆற்றுவதற்கு பொருத்தமற்ற உரையாகவே அது அமைந்தது.

அதாவது பதவி விலகமாட்டோம், 88, 89 காலப்பகுதியில் நடந்ததுபோல நடக்கும் என்பதையே அவர் கூறவிளைந்துள்ளார். அது மிகவும் மோசமானதொரு அறிவிப்பாகும்.

அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. எம்முடன் பேச்சு நடத்தி, எமது யோசனைகளும் உள்வாங்கப்பட்டால். அது குறித்து சாதகமாக பரிசீலிக்கலாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles