பிரதமர் முன்வைத்த கோரிக்கையை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளதென அறியமுடிகின்றது.
நாடாளுமன்றத்தில் நாளொன்றை வீணடிப்பதைத் தவிர்க்க, பெண் எம்.பி ஒருவரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார்.
எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆண் எம்.பி ஒருவரின் பெயரை பிரேரித்து முன்மொழிந்தது. இது, பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கு வழிவகுத்தது.