பிரதமரின் வங்கிக் கணக்கில் கைவைக்கப்பட்டதா?

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

அரச வங்கியொன்றின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சொந்தமான கணக்கிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பணம், பிரதமருக்கு மிக நெருக்கமான ஒருவர் ஊடாக கடந்த 6 வருடங்களில் அவ்வப்போது மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

பிரதமரின் குறித்த வங்கிக் கணக்கின் தானியக்க பணப் பறிமாற்று அட்டையை பயன்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவருக்கு சம்பளமாக கிடைக்கப் பெற்ற பணத் தொகை எனவும் கூறப்பட்டது.

இந் நிலையில் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரொஹான் வெலிவிட்ட, இவ்வாறானதொரு சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை. மேற்படி சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் தமக்குத் தெரிந்தபடி தவறானவை ஆகும்.

இதேவேளை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, தனது தந்தையின் வங்கிக் கணக்கு தொடர்பான சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles