பிரதமருக்கு எதிராக மகளிர் அணியை களமிறக்கினார் சஜித்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வதிவிடத்தை முற்றுகையிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் நுழைவாயில் மற்றும் அவரது இல்லத்தின் சுற்றுப்புறங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

” ராஜபக்சக்களின் மீட்பரான ரணிலிடம் இருந்து தாய்நாட்டை மீட்போம்.” என போராட்டக்களத்தில் இருந்து ஹிருணிக்கா பிரேமசந்திர சூளுரைத்தார்.

வீதித்தடைகளைமீறி, பிரதமரை சந்திப்பதற்கு அவர் முன்னோக்கி செல்ல முற்பட்டார். எனினும், தடுத்து நிறுத்தப்பட்டார். இதன்போது பெண் பொலிஸ் அதிகாரிகளை கட்டியணைத்த ஹிருணிக்கா, இது அன்பால் நடத்தப்படும் போராட்டம் என்றார்.

Related Articles

Latest Articles