“ தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க் கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக் களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது.”
– இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் என தமிழ் மின்னிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“ பிரதமரை மாற்ற வேண்டுமா, இல் லையா என்பதை ஜனாதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன அவசரம்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் பதவியை நான் எந்தச் சந்தர்ப் பத்திலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை. ஜனாதிபதி என் மீது வைத்துள்ள நம்பிக் கையை நான் கேள்விக்குட்படுத்த வில்லை.
ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தி அரசும் என் மீது அழுத்தங்கள் எதனை யும் இதுவரை பிரயோகிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் வதந்திகளை வெளியிட்டு வருகின்றன. சில ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
அனைத்து ஊடகங்களும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். உண்மை நிலைமைகளை ஊடகங்கள்தான் மக்க ளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.”- என பிரதமர் மேலும் கூறினார் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.