பிரதமர் பதவியில் இருந்து கலாநிதி ஹரிணி அமரசூரிய நீக்கப்பட்டு, புதிய பிரதமராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளார் என வெளியாகும் தகவல்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அமைச்சரவை முடிவுக்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
” பிரதமர் பதவியில் மாற்றம் செய்வதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. நாம் கூட்டு பொறுப்புடன் செயற்பட்டுவருகின்றோம். சமூக ஊடகங்களில் கட்டுக்கதைகளை பரப்பிவிட்டு அது தொடர்பில் கேள்வி கேட்பதில் இருக்கும் நியாயம் என்ன? எம்மிடையே எவ்வித மோதலும் கிடையாது.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம். அரசியல் கலாசாரத்தை மாற்றுவோம். அதை நோக்கியே எமது பயணம் தொடரும்.” – என்று குறிப்பிட்டார்.










