பிரதமர் பதவி கருவுக்கு?

சர்வக்கட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 13 யோசனைகளுக்கமைய, இடைக்கால அரசமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் நேற்று இணக்கம் வெளியிட்டது.

எனவே, இடைக்கால அரசின் பிரதமராக கரு ஜயசூரிய நியமிக்கப்படுவார்.

கரு ஜயசூரிய நாடாளுமன்றம் வருவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் எம்.பியொருவர், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

Related Articles

Latest Articles