ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது எனவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதமர் வேட்பாளர் நாமல் ராஜபக்ச எனவும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும், ராஜபக்ச குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” முதலில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை பஸில் ராஜபக்ச பெற்றுவிட்டார். ஏபரல் மாதத்தில் திகதி நிர்ணயிக்கப்படும். நாமல் ராஜபக்சதான் பிரதமர் வேட்பாளர்.
ஜனாதிபதி தேர்தலில் ரணிலை களமிறக்கும் பஸிலிடம் ஆரம்பத்தில் இணக்கம் இருந்தாலும் மஹிந்த அதனை விரும்பவில்லை. மொட்டு கட்சி அடுத்த தேர்தலுக்காக முன்வைக்கப்பட்டு 10 திட்டங்களில் ரணில் வேட்பாளர் அல்லர் என்ற விடயமும் ஒன்றாகும்.
ராஜபக்சக்களுக்கு எதிராக செயற்படுகின்றோம் என செயற்படும் சிலர்கூட பஸில் ராஜபக்சவின் ஏற்பாடுதான். ராஜகிரியவில் அண்மையில் திறக்கப்பட்ட அலுவலகம் ஒன்றுகூட மொட்டு கட்சியின் தேர்தல் அலுவலகமாக செயற்பட்ட இடம்தான்.” – என்றார்.