10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் பெயரை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்தார். அமைச்சர் சரோஜா போல்ராஜ் அப்பெயரை வழிமொழிந்தார்.
வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்படாததால், அவர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.