பிரதி சபாநாயகர் ஏகமனதாக தெரிவாகும் சாத்தியம்

நாடாளுமன்றத்தில் இன்று (17) பிரதி சபாநாயகர் பதவிக்கு வாக்கெடுப்பு இடம்பெறாதென அறியமுடிகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை, அக்கட்சி பிரதி சபாநாயகர் பதவிக்காக பெயரிட்டுள்ளது. அவருக்கு ஆதரவு வலுத்துள்ளது.

இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் எவரையும் முன்மொழியாதென அறியமுடிகின்றது. அந்தவகையில் பிரதி சபாநாயகராக ரோஹினி கவிரத்ன, ஏகமனதாக தெரிவுசெய்யப்படுவார்.

இலங்கையில் முதலாவது பெண் பிரதி சபாநாயகர் என்ற அந்தஸ்த்தையும் பெறுவார்.

Related Articles

Latest Articles