நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி முக்கிய மூன்று வாக்கெடுப்புகள் இடம்பெறவுள்ளன.
அன்றைய தினம் முதலாவதாக பிரதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவர் போட்டியிட்டால் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதன் பின்னர் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும்.
இதையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு அஜித் ராஜபக்சவை முன்மொழிவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று தீர்மானித்துள்ளது.
