அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சிலருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 5,400 வரையான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீளாய்வு அறிக்கை கிடைத்த பின்னர் பாதுகாப்பு குறைப்பு நடவடிக்கை இடம்பெறும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருமவால் சபையில் நேற்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு புறம்பாக, ஏனைய நபர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 5,400 வரையானோர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மீளாய்வு அறிக்கையொன்றை கோரியுள்ளேன். அந்த அறிக்கை கிடைத்த பிறகு பாதுகாப்பை குறைக்க வேண்டிய இடத்தில் நிச்சயம் குறைப்பு நடைபெறும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
