பிராந்திய தோடங்களிலுள்ள தோட்டத் தொழிலாளர்களில் சுமார் 100% பேருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், பிராந்திய தோட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களில் சுமார் 100%மானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெருந்தோட்ட துரைமார் சம்மேளனம் (PA) மற்றும் பெருந்தோட்ட மனித மேம்பாட்டு அறக்கட்டளை (PHDT) அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 29 வரை, ஏழு பிராந்தியங்களில் 95%க்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டதாக PA மேலும் தெரிவித்துள்ளது.

PHDTஇன் சமீபத்திய தரவுகளின்படி, அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்திற்கு ஆதரவாக 20-29 வயதுடையவர்களில் 75%க்கும் அதிகமானவர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார அதிகாரிகள், பெருந்தோட்ட மனித மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் பிராந்திய தோட்ட நிறவுனங்களுடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பெருந்தோட்ட துரைமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி ரொஷான் இராஜதுரை, “கொவிட் தடுப்பூசி திட்டத்தை பயனுள்ளதாக்கியதற்காக அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நாம் நன்றி கூறுகின்றோம். எமது பிராந்திய பெருந்தோட்ட நிறுவனத்தில் (RPC) மாத்திரம் 95%க்கும் அதிகமான தோட்ட சமூகத்தினருக்கு முதல் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கேகாலை மற்றும் ஹட்டன் வரையான RPC தோட்டங்களில் வசிக்கும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசி போட முடிந்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.” என அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மனித மேம்பாட்டு அறக்கட்டளையின் சமீபத்திய தரவுகளின்படி, 30-59 வயதிற்கு இடைப்பட்ட பெருந்தோட்ட வயதினரில் 97%க்கும் அதிகமானவர்கள் முதல் தடுப்பூசியை பெற்றுள்ளனர் மற்றும் இரு பிராந்தியங்களிலும் உள்ள 93%க்கும் அதிகமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

“பெருந்தோட்ட மக்கள் வாழும் ஹட்டன் பிரதேசத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் ஏறக்குறைய 100% பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைவரையும் பாதுகாக்கவும் வைரஸ் பரவுவதைக் கட்டடடுப்படுத்தவும் நாங்கள் மேற்கொண்ட பணிக்கு இது ஒரு பெரிய சாதனையாகும்.

20-29 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் விரைவில் பெறுவதை உறுதிசெய்வதே எங்கள் அடுத்த கட்டமாகும். எனவே, பெருந்தோட்டப் பகுதிகளில் வசிப்பவர்கள் இவ்வருட இறுதிக்குள் இரண்டு மருந்துகளையும் முழுமையாகப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்ய நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.” என PHDT தெரிவித்தது.

தடுப்பூசித் திட்டத்திற்கு இணையாக, பிராந்திய ஊழியர்கள், MOHக்கள் மற்றும் தோட்ட சுகாதாரப் பணியாளர்களை உள்ளடக்கிய கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்களை PHDT தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது, ஒரு நபர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், சரியான சுகாதார நடைமுறைகள், சமூக இடைவெளி மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
2021ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் இதுவரை 98 இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல நிகழ்ச்சித் திட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

“தேயிலை தொழிற்துறையின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் எமது தோட்டத் தொழிலாளர்களையும் சமூகத்தையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை.

தடுப்பூசித் திட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது, முதலில் முன்னணி ஊழியர்களுக்கு, இரண்டாவது சமூகத் தலைவர்கள் உட்பட தொழிற்சாலை ஊழியர்களுக்கு, மூன்றாவது ஊழியர்கள் மற்றும் பிற நபர்களுக்கு. திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், மீதமுள்ள அனைத்து வயதினருக்கும் மற்றும் தடுப்பூசி போடாத நபர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

தடுப்பூசி திட்டத்தில் திருப்தி அடையக்கூடாது, அது நடந்து கொண்டிருக்கிறது மற்றும் பாதுகாப்பான முறைகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஒருவேளை எங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்க வேண்டியிருக்கும்.” என கலாநிதி ரொஷான் ராஜதுரை மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles