பிரான்ஸ் ரீவி படப்பிடிப்பாளர் உக்ரைனில் தாக்குதலில் பலி!

பிரான்ஸின் 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சிச் சேவையாகிய BFM சனலின் படப்பிடிப்புச் செய்தியாளர் ஒருவர் உக்ரைன் போர்க் களத்தில் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.

BFM தொலைக்காட்சி ஆசிரிய பீடத்தினர் இத்தகவலைத் துயரத்துடன் வெளியிடுவதாக அறிவித்திருக்கின்றனர்.

தீவிரமான மோதல்கள் இடம்பெற்று வருகின்ற உக்ரைனின் கிழக்குப் பகுதியில் (Severodonetsk) திங்கட்கிழமை நடந்த ஒரு தாக்குதலிலேயே அவர் உயிரிழந்தார் என்ற தகவலை அதிபர் மக்ரோன் வெளியிட்டிருக்கிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக BFM தொலைக்காட்சிப் படப்படிப்பாளராகப் பணியாற்றிவந்த 36 வயதான பிடெரிக் லுகிளயர் இமோஃப் (Frédéric Leclerc-Imhoff) என்பவரே உயிரிழந்தவராவார்.

அவருடன் பயணித்த மற்றொரு செய்தியாளர் காயமடைந்தார்.

90 நாட்களுக்கு மேலாக நீடிக்கின்ற போரில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் டொன்பாஸ் பிராந்தியத்துக்கு அருகே முக்கிய சிறு நகரங்கள்மீது பெரும் தாக்குதல் தொடுத்துள்ளன.

மோதல் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களது வாகன அணி ஒன்றுடன் பயணித்த சமயத்திலேயே செய்திப் படப் பிடிப்பாளர் குண்டுச் சிதறல்களில் சிக்கினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல் எவ்வாறான சூழ்நிலையில் நிகழ்ந்துள்ளது என்பது குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு கேட்
டுள்ளது. புதிய அமைச்சரவையில் அண்மையில் பதவியேற்ற வெளிவிவகார அமைச்சர் கத்தரின் கொலோனா (Catherine Colonna) அம்மையார் கீவ் நகருக்கு விஜயம் செய்துள்ள சமயத்தில் படப்பிடிப்பாளரது மரணச் சம்பவம்
நிகழ்ந்துள்ளது.

Related Articles

Latest Articles