பிரிட்டன் பிரதமர் பதவிக்கான உள்கட்சிப் போட்டியில் ரிஷி சுனக்கை விட 21 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.
பிரிட்டனில் ஆளும் கொன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளை போரிஸ் ஜான்சன் இராஜிநாமா செய்தார்.
பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்குக்கும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
பிரதமர் பதவிக்கான வாக்குப் பதிவு கடந்த 2ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்தத் தேர்தலில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கொன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணைய வழியில் வாக்கு அளித்தனர்.
பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் எதிர்பார்த்தது போலவே லிஸ் டிரஸ் தேர்வு ஆனார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட ரிஷி சுனக்கைவிட 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளுடன் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.