பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தவர்களிடம் இழப்பீடு கோர நடவடிக்கை

மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தவர்களிடமிருந்து, இழப்பீட்டை ஈடு செய்வதற்கான கட்டணம் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில்   நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோ லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றியபோது இடம்பெற்ற ஓர் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அவருக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த அதிகார குற்றமிழைக்கவில்லை எனவும், தூதரக அதிகாரி என்பதால் சர்வதேச சட்டம், வியன்னா சாசனத்தின் பிரகாரம் அவருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு உள்ளது எனவும் பிரிட்டன் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக எவ்வித அடிப்படையும் இன்றி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர்களிடமிருந்து, வழக்குக்காக செலவளித்த கட்டணத்தை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தவறான வழக்கு. நீதிமன்றமும் அடிப்படையற்றது என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் வழக்குக்காக செலவளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவேதான் வழக்குக்கா செலவிட்ட தொகையை அறிவிட திட்டமிட்டுள்ளோம்.- ” என்றார்.

Related Articles

Latest Articles