பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை இன்று (08) நடைபெறவுள்ளது.
அவரது பூதவுடல் நேற்று (07) கனேமுல்லையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

சியால்கோட்டிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளரான பிரியந்த குமார சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நேற்றுமுன்தினம் (06) பிற்பகல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
