பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அல்கராஸ், இகா ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நெ்றறு ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 310-ம் நிலை வீரரான இத்தாலியை சேர்ந்த கியுலியோ செப்பியேரியை எதிர்த்து விளையாடினார்.

இதில் அல்கராஸ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் ஹங்கேரியின் ஃபேபியன் மரோசானுடன் மோதுகிறார் அல்கராஸ்.

 

7-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் அல்பர்ட் ரமோஸ் வினோலஸையும், 25-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பாப்ரின், ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும் 5-ம் நிலை வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 42-ம் நிலை வீராங்கனையான சுலோவேக்கியாவின் ரெபேக்கா ஸ்ராம்கோவாவை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். இகா ஸ்வியாடெக்குக்கு பிரெஞ்சு ஓபனில் இது தொடர்ச்சியான 22-வது வெற்றியாக அமைந்தது. 2-வது சுற்றில் இகா ஸ்வியாடெக், கிரேட் பிரிட்டனின் எம்மா ரடுகானுவை எதிர்கொள்கிறார்.

ரடுகனானு தனது முதல் சுற்றில் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் வங் சின்யுவை தோற்கடித்தார். 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ 0-6, 1-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஜெசிகா பவுசாஸ் மனீரோவிடம் தோல்வி அடைந்தார்.

12-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் ஜூலியா ரீராவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles