நாட்டில் கரட்விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், சில ஹோட்டல்களில் கரட் சேர்க்கப்படாமலேயே கொத்து ரொட்டி, ரைஸ் என்பன தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நேற்றைய சந்தை நிலைவரப்படி ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை 2000 ரூபாவாகவும், சில்லறை விலை 2 ஆயிரத்து 500 ரூபாவாகவும் இருந்துள்ளது.
இவ்வாறு அதிக விலை காரணமாகவே சில ஹோட்டல் உரிமையாளர்கள், கொத்து ரொட்டி, ரைஸ் என்பவற்றுக்கு கரட் சேர்ப்பதை தவிர்த்து வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
லீக்ஸ் அல்லது வெங்காயத்தாளே சேர்க்கப்பட்டு ரைஸ், கொத்து தயாரிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. சில இடங்களில் கொத்து ரொட்டி, ரைஸ் என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன எனவும் தெரியவருகின்றது.
