பிலிப்பைன்ஸ் மீதான ஆயுத தாக்குதலானது அமெரிக்காவின் பாதுகாப்பு கடமையை தூண்டும்: வெளியுறவுத்துறை

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கைகளை சீனா நீர்ப்பீரங்கி கொண்டு தடுத்தமைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) கண்டனம் தெரிவித்தது,

“தென் சீனக் கடலில் உள்ள அதன் கடலோரக் காவல்படை உட்பட பிலிப்பைன்ஸின் பொதுக் கப்பல்கள், விமானங்கள், ஆயுதப் படைகள் மீது ஆயுதமேந்திய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்துகிறது – 1951 அமெரிக்க பிலிப்பைன்ஸ் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரிவு IV இன் கீழ் அமெரிக்க பரஸ்பர பாதுகாப்பு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்,” என ஒரு ஊடக அறிக்கை மூலம் சீனாவை அமெரிக்கா எச்சரித்தது.

“தென் சீனக் கடலில் இரண்டாவது தாமஸ் ஷோலுக்கு ஆகஸ்ட் 5 ஆம் திகதி பிலிப்பைன்ஸ் மேற்கொண்ட மீள்விநியோகப் பணியைத் தடுக்கும் வகையில், சீனக் குடியரசின் (PRC) கடலோரக் காவல்படை மற்றும் கடல்சார் ஆயுதப்படைகளின் ஆபத்தான நடவடிக்கைகளை எதிர்கொள்ள அமெரிக்கா தமது நட்பு நாடான பிலிப்பைன்சுடன் நிற்கிறது.” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

“நீர் பீரங்கிகளை பயன்படுத்தல் மற்றும் பாதுகாப்பற்ற தடுப்பு சூழ்ச்சிகளை மேற்கொள்ளல் மூலம் பிலிப்பைன்ஸின் உயர் கடல் வழிசெலுத்தலின் சட்டப்பூர்வ நடைமுறையில் PRC தலையிட்டதோடு, பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது” என்று அந்த செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.

சீனாவின் நடவடிக்கைகள் தென் சீனக் கடலின் தற்போதைய நிலையை அச்சுறுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“PRCயின் இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு முரணானவை என்பதோடு இது தென் சீனக் கடலில் மேற்கொண்ட அச்சுறுத்தல்களில் அண்மைய நடவடிக்கை என்றும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நேரடியான அச்சுறுத்தல்” என்றும் அந்த வெளியீடு கூறியது.

“இரண்டாவது தாமஸ் ஷோலில் நிறுத்தப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் சேவை உறுப்பினர்களை அடைவதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் தடுப்பதன் மூலம், சட்டப்பூர்வமான பிலிப்பைன்ஸ் கடல்சார் நடவடிக்கைகளிலும் PRC தேவையற்ற தலையீட்டை மேற்கொண்டுள்ளது” என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜூலை 2016 இல் வெளியிடப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் சட்டப்பூர்வ முடிவில் தெளிவுபடுத்தப்பட்டபடி, பிலிப்பைன்ஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் அமைந்துள்ள இரண்டாவது தாமஸ் ஷோலைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு PRC க்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை” என்று அது மேலும் கூறியது.

“நடுவர் தீர்ப்பை கடைபிடிப்பது மற்றும் வழிசெலுத்துவதற்கான சுதந்திரத்தை மதிக்க வேண்டும் – இது அனைத்து மாநிலங்களுக்கும் உரிமையுடையது” என்று அமெரிக்கா PRC க்கு அழைப்பு விடுக்கிறது என்று செய்திக்குறிப்பு கூறுகிறது.

Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51

Related Articles

Latest Articles