பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு ஊடாக மலையகத்தை மேம்படுத்த திட்டம்!

உலகில் முன்னணி சேவை நிறுவனங்களுள் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக, மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (31.05.2023) அமைச்சில் நடைபெற்றது.                                                                       

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.                                                                               

அத்துடன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்ரமசிங்க, பிரத்யேக செயலாளர் மொஹமட் காதர் ஆகியோரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக இலங்கையில் முன்னெடுக்ககூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் சிறார்களுக்கான போசாக்கு உணவு, சுகாதார மேம்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், நீர்வழங்கலை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட சில விடயங்கள் பற்றியும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

தலைமையகம் ஊடாக கலந்துரையாடி, முன்னேற்றகரமான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் அமைச்சரிடம் இதன்போது உறுதியளித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles