பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

விஜய்யின் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் அந்த படம் ஏப்ரல் மாத ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தமிழ்புத்தாண்டுக்கு அந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். அவரது முதல் தமிழ் படமான முகமூடி மிகப்பெரிய தோல்வி என்றாலும், அதற்கு பிறகு தெலுங்கு ஹிந்தி என நடித்து பெரிய ஹீரோயினாக வளர்ந்துவிட்டார்.

தற்போது பீஸ்ட் படத்தில் நடித்ததற்காக அவர் வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளிவந்து இருக்கிறது. அவர் 3.5 கோடி ருபாய் இந்த படத்திற்கு பெறுகிறார் என கூறப்படுகிறது. வழக்கமாக தெலுங்கில் 2 கோடி மட்டுமே அவர் பெற்று வந்த நிலையில் தற்போது தமிழில் இவ்வளவு அதிகம் கிடைத்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் அவர்.

Related Articles

Latest Articles