புகையிரத பயணச்சீட்டு ரத்து!

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் நாளை முதல் பயணச்சீட்டு வழங்குவதை ரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் பொதிகள் ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்தே குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபடவுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

Related Articles

Latest Articles