புகையிரத பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில் புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அட்டணை எதிர்காலத்தில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வீதி திருத்தப் பணிகள் தாமதமானால் புகையிரதங்களை இயக்குவதில் தாமதம் தொடரலாம் என புகையிரத திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலைமையை கருத்திற் கொண்டு கரையோரப் பாதையில் புகையிரதங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles