உடபளாத்த பிரதேச சபைக்குட்பட்ட புசல்லாவை, வகுவப்பிட்டிய கிராம சேவகர் பிரிவிலுள்ள வீடொன்றில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டு, குறித்த வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதால் குறித்த குடும்பம் நிர்க்கதியாகியுள்ளது.
குறித்த வீட்டின் குடும்ப தலைவர் நேற்று வேலைக்கு சென்றுள்ளார், மகள் பாடசாலைக்கும் சென்றிருந்த வேளையில், குடும்ப தலைவி அரசாங்கத்தால் வழங்கப்படும் அரிசியினை பெற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார்.
அவ்வேளையிலேயே மின்கசிவு ஏற்பட்டு இத்தீபரவல் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
தற்போது இந்த விடயம் தொடர்பில் கிராம சேவகருக்கும், கம்பளை உடபளாத்த பிரதேச செயலகத்திற்கும், புசல்லாவை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கூலி வீட்டில் இவர்கள் சுமார் 51 வருடங்கள் பரம்பரையாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கென தனியான வீட்டை அமைத்துக் கொடுப்பதற்கு சமூகத்தில் பல சமூக சேவையாளர்கள் முன் வந்துள்ளார்கள். இதற்கான சொந்த காணியை பெற்றுக் கொள்வதற்கு கிராமசேவர் ஊடாக உடபளாத்த பிரதேச செயலாளருக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் பிரமுகர்களும் பச்சைக் கொடி காட்டி வருகின்றனர்.
மகள் புஸ்ஸல்வாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயின்று வருகின்றார்.
