உக்ரைன் ஜனாதிபதி ஜலன்ஸ்கி எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின், கடந்த வாரம் இந்தியா வந்தபோது உக்ரைன் போர் நிறுத்தம் குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடி இருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எதிர்வரும் ஜனவரி மாதம் டெல்லி விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவரது பயண திகதியை உறுதி செய்ய இந்திய, உக்ரைன் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.










