புதிய அமைச்சரவை 14 இல் பதவியேற்பு! ஜீவனும் அமைச்சராகிறார்?

பிரதமராக மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்றுள்ள நிலையில், புதிய அமைச்சரவை 14ஆம் திகதி பதவியேற்கவுள்ளது.

இதில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற புதுமுக எம்.பிக்களுக்கு விசேட திட்ட அமைச்சுக்கள் வழங்க ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகத் தரப்பு  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இராஜாங்க அல்லது திட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படலாம் என்றும் ஜீவன் தொண்டமான் இதில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜீவன் தொண்டமான் தலைமையில் அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில், புதுமுக உறுப்பினராக அதிக கூடிய விருப்புக்களை மாவட்டத்தில் பெற்றுள்ளதால் இந்த அமைச்சுப் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

26 அமைச்சரவை அமைச்சர்களும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுக்கள் 40 பேர் மற்றும் பிரதியமைச்சுக்கள் உள்ளிட்ட 65 பேர் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Latest Articles