இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆவது தினத்தையிட்டு பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்ட இலங்கை பொலிஸ் சேவையின் முதலாவது பொலிஸ் மா அதிபராக ஸ்ரீமத் ஜீ. டபிள்யூ. ஆர். கெம்பல் 1866 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்பட்டார்.
இன்று காலை பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் சர்வமத வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 08.30 க்கு கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலில் இந்து மத வழிபாட்டு நிகழ்வுகளும் காலை 09.30 க்கு கொழும்பு 02 தெவட்டகஹ பள்ளிவாசலில் இஸ்லாமிய மத பிரார்த்தனைகளும் காலை 07.45க்கு பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்திலும் காலை ஹுணுப்பிட்டி கங்காராமை விஹரையில் பௌத்த மத வழிபாட்டு நிகழ்வும் நடைபெற்றது.
இன்று நடைபெறவுள்ள பிரதான நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
