10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தமது கட்சியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை நியமிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
பொதுத்தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். 51, 391 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
புதிய சபாநாயகர் தெரிவு நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியும் சபாநாயகர் வேட்பாளர் ஒருவரை முன்மொழியவுள்ளது.
அவ்வாறு நடந்தால் இரகசிய வாக்கெடுப்புமூலம் சபாநாயகர் தேர்வு இடம்பெறும்.










