” அரசாங்கத்தின் வாலாக செயற்படும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தோட்டத் தொழிலாளர்களின் காதில் பூ சுற்றி அவர்களை மீண்டும் ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றது.” – என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
பண்டாரவளையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தோட்டத் தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களை ஏமாற்றும் வகையிலான நடவடிக்கையை அரசாங்கமும், அரசாங்கத்தின் வாலாக செயற்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் முன்னெடுத்துவருகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள்தான் இதொகாவினர், தற்போது அது பிழையென கூறுகின்றார்கள். சம்பள நிர்ணய சபையின் பிரதான சூத்திரதாரிகளும் அவர்களே, இப்படியானவர்கள் தற்போது புதிய சம்பள சூத்திரத்தை அறிமுகப்படுத்தபோகின்றார்களாம்.
இது சம்பந்தமாக ஜெனிவாவில் பேச்சு நடத்தியதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார். நீங்கள் புதிதாக அறிமுகப்படுத்தபோகும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள சூத்திரம் என்ன, அந்த சூத்திரம் மக்கள் மயப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் மக்களை ஏமாற்ற முற்படக்கூடாது.” – என்றார்.
”










