புதிய சாதனை படைத்த யுபுன் அபேகோன்

ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் யுபுன் அபேகோன் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையை புதுப்பித்துள்ளார்.

ஜெர்மனியில் நடைபெறும் மெய்வல்லுநர் போட்டியில் 10.06 செக்கன்களில் போட்டி தூரத்தை கடந்து, யுபுன் அபேகோன் புதிய சாதனையை படைத்துள்ளார்.

அதற்கமைய, தெற்காசிய சாதனையை யுபுன் அபேகோன் புதுப்பித்துள்ளார்.

கடந்த வருடம் இதே போட்டியில் கலந்துகொண்ட யுபுன் அபேகோன், 10.09 செக்கனில் போட்டித் தூரத்தை கடந்து சாதனை படைத்திருந்தார்.

60 மீட்டர், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தெற்காசிய சாதனை மற்றும் 150 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஆசிய சாதனையை யுபுன் அபேகோன் இதுவரை தம்வசப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Articles

Latest Articles