புதிய தொழிற்சங்க கூட்டணிக்கு இதொ.கா. இணக்கமா?

மலையகத்தில் புதிய தொழிற்சங்க கூட்டணி அமையவுள்ளது என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. இக்கூட்டணிக்கு இ.தொ.கா. ஆதரவு வழங்கும் என கட்சி மட்டத்தில் எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கொரோனா தொற்றியதால் கட்சியால் எனக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. கட்சியுடன் கலந்துரையாடிவிட்டு இது தொடர்பில் தெரியப்படுத்துகின்றேன்.

– என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஓரணியில் திரண்டு எதிர்ப்பதற்கும், தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் எனும் கூட்டணியை உருவாக்குவதற்கும் மலையகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

இணையவழி ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி உட்பட மலையகத்தில் செயற்படும் 12 தொழிற்சங்கங்கள் இதற்கான விருப்பத்தை வெளியிட்டதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் நேற்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இ.தொ.காவின் உப தலைவர் என்ற அடிப்படையில் கணபதி கனகராஜிடம் வினவினோம், இதன்போது இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது, கொரோனா தொற்றியதால் மூன்று மாதங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. கட்சியுடன் பேசிவிட்டே இது பற்றி குறிப்பிட முடியும்.” – என்றார்.

Related Articles

Latest Articles