புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் கிராமப்புறத்தில் வறுமையை ஒழிக்க உதவும் கிரிஸ்புரோ

50 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ, வாடிக்கையாளர்களுக்கு உயர்தரம், சத்துள்ள புதிய தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் வறுமையைப் ஒழிக்க ஒவ்வொரு கட்டத்திலும் தனது பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் வலுவூட்டுவதற்கும் உழைத்து வருகிறது.

முக்கியமாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இலங்கையின் ஊவா, வட-மத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் 250 விவசாயக் குடும்பங்கள் தங்களுடைய சொந்த கோழிப் பண்ணைகளை அமைப்பதற்கு உதவுவதற்காக கிரிஸ்புரோ தனது ‘திரி சவிய’ திட்டத்தை தற்போது நிறவுன ரிதியான சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கிரிஸ்ப்ரோவில் இருந்து விவசாயிகளுக்கு உயர்தர சிறப்புப் பயிற்சி அளித்து, உள்ளூர் விவசாயிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தில் வலுவான பங்களிப்பை வழங்க உதவுவதுடன் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒவ்வொரு கட்டமும் கிரிஸ்ப்ரோவின் இனப்பெருக்கம் செய்யும் இடத்தில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர குஞ்சுகள் மற்றும் கோழித் தீவன தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் உணவின் தரம் ஆகியவற்றின் மூலம் தரம் மற்றும் உயர் தரத்தில் கவனம் செலுத்தியது.

“கடந்த சில தசாப்தங்களாக வேகமாக வளர்ச்சியடைந்துள்ள கிறிஸ்ப்ரோவின் பொருளாதார மற்றும் சமூக பங்களிப்பு இப்போது இன்றியமையாதது. முழு கோழி இறைச்சித் தயாரிப்புத் தொழிலுக்கும் இன்றியமையாத பல விவசாய சமூகங்களின் நலனுக்காக வணிகத்தைத் தாண்டி விரிவுபடுத்துவதே நிறுவனத்தின் ஆரம்ப நோக்கங்களாகும்.” என கிறிஸ்ப்ரோவின் சிரேஷ்ட முகாமையாளர் அமோரேஸ் செல்லார் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம், முழு உள்ளூர் விவசாய சமூகத்திற்கும் அத்தியாவசியமான முக்கியமான ஆதரவு வழங்கப்படுகிறது.

உதாரணமாக, இந்த முயற்சியின் ஒரு முக்கிய அம்சம் கோழி பண்ணையாளர்களுடன் ஏற்படும் நெருக்கமான ஒத்துழைப்பாகும். இந்த விவசாயிகளுடன், கிறிஸ்பரோவிற்காக கோழிகளை வளர்க்கவும், சிறிய அளவிலான வெளிப்புற கோழிப்பண்ணைத் திட்டங்கள் ஆகியவற்றிற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டாண்மை மூலம், கிரிஸ்ப்ரோ இந்த விவசாயிகளுக்கு கோழி வளர்ப்பு, கால்நடை உதவி, உணவு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும், அதே நேரத்தில் சிறிய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பயிர்களை தினசரி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியும்.

இந்தத் திட்டம் பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் தங்கள் பண்ணைகளிலிருந்து சுதந்திரமாக செயல்பட அதிகாரம் அனுமதிப்பதன் மூலம் நிலையான வருமானத்தை உருவாக்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், இந்த ஒப்பந்த விவசாயிகள், நிறுவனத்தின் ஆதரவின்றி கோழிகளை வளர்க்கும்போது வழக்கமாக எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை கணிசமாகக் குறைக்கிறது.

கடந்த வருடம் மாத்திரம் கிறிஸ்பரோ, மொனராகலை, மஹியங்கனை மற்றும் கிராந்துருகோட்டே ஆகிய பகுதிகளில் கோழி உற்பத்திக்கான சோளத்தை வழங்கி தொடர்ந்து ஒத்துழைத்ததுடன், இதுபோன்ற பகுதிகளில் 1,200க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து சோளத்தை கொள்முதல் செய்ய ஒர பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவு செய்து கிராமப்புற பொருளாதாரத்தை பலப்படுத்தியுள்ளது.

மேலும், கிறிஸ்புரோ கால்நடை தீவன தொழிற்சாலை விவசாயிகளை நேரடி விற்பனையில் ஈடுபட அனுமதிக்கிறது. இங்கு விவசாயிகள் இடைத்தரகரை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை, அவர்களின் விளைபொருட்கள் சேகரிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இறுதியில், கிறிஸ்ப்ரோ மற்றும் விவசாயிகளுடனான பிணைப்பு, வலுவான பொருளாதாரத்தில் திருப்தியான குடிமக்களை உருவாக்குவதற்கான அதன் மகத்தான அர்ப்பணிப்பில் பலனை அனுபவிக்கிறது.

இத்திட்டம் கோழிப்பண்ணை தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் அதன் குறுகிய கால மற்றும் நீண்ட கால பலன்கள் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மிகவும் ஒழுக்கமான, கட்டமைக்கப்பட்ட மற்றும் சீரான வரி செலுத்துவோருடன், தொழில்துறையானது நாட்டின் முதன்மையான விவசாய வருமானம் ஈட்டும் துறைகளில் ஒன்றாக உள்ளது.

Related Articles

Latest Articles