புதிய மாற்றத்தின் பின்னாலே வரும் புதுயுகத்திலும் தொழிலாளர்கள் புதிய தோட்ட “எஜமானர்களுக்கு” “கொத்தடிமைகளாக” இருக்க கூடாது. முடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,
“பெருந்தோட்டங்கள் நஷ்டமடைவது காலம்காலமாக நடைபெறுகிறது.
இவற்றை எதிர்கொள்ளவே நஷ்டமடையும் பெருந்தோட்டங்கள், சிறு தோட்ட உடைமைகளாக பிரித்து வழங்க வேண்டும் என நாம் எப்போதும் கூறி வந்துள்ளோம்.
அந்த முயற்சிகளையும் நாம் ஆரம்பித்து இருந்தோம்.
இந்நிலையில் நஷ்டமடையும் தோட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அக்கறை காட்டுவது நல்லது.
அவற்றை சிறு தோட்டங்களாக பயிர் செய்கைக்காகவும், இரத்தினக்கல் அகழ்வுக்காகவும், காணிகள் பிரித்து வழங்கப்பட ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை நல்லதே.
ஆனால் காணிகள் பிரித்து, வழங்கப்படும் போது, தோட்ட தொழில் துறையில் பெரும் தொழில் நேர்த்தி அனுபவம் கொண்ட தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும்.
இந்த புதிய மாற்றத்தின் பின்னாலே வரும் புதுயுகத்திலும் தொழிலாளர்கள் புதிய தோட்ட “எஜமானர்களுக்கு” “கொத்தடிமைகளாக” இருக்க கூடாது. முடியாது.
இதை கவனத்தில் கொள்வது, அரசின் உள்ளே இருப்பவர்களின் கடப்பாடு. ஞாபகப்படுத்துகிறேன்.” – என்றுள்ளது.