புதையல் தோண்டிய அறுவர் பதுளையில் கைது!

பதுளை, கலஉட 13 ஆம் கட்டை கொஸ்கொல்ல ஒய பகுதியில் புதையல் தோண்டிய அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலஉட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, குறித்த பகுதியில் நேற்று மாலை சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அறுவர் கைது செய்யப்பட்டதுடன், ஆட்டோ ஒன்றும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும், வாளொன்றும் மற்றும் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை, வெள்ளவாய, பண்டாரவளை, ஹாலிஎல, கலஉட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரதான சந்தேக நபர் 71 வயதுடையவர் எனவும் ஏனையவர்கள் 47-55 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles