புத்தாண்டு தினத்தில் இருளில் மூழ்கும் மத வழிபாட்டுத்தலங்கள்!

விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணம் குறைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உந்துவப் போயா, நத்தார் சமய சடங்குகள் மற்றும் புத்தாண்டு தினத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் இருளில் முழ்கச் செய்யப்படும் என கலஹா சிறி சாந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) இடம்பெற்ற போயா தின சமய வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்த மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக மகா சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் போராட்டம் நடத்திய போது, ​​பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கண்டிக்கு வந்து மல்வத்து அஸ்கிரிய உள்ளிட்ட மும்மதத் தலைவர்களையும், மதச்சார்பற்ற தலைவர்களையும் சந்தித்து மின்கட்டண சலுகை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பிரிவெனாக்களுக்கு சூரிய சக்தி திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் தயாரிப்பதாக தெரிவித்தார். ஆனால் அந்த வாக்குறுதியின்படி இதுவரை மின் கட்டணம் குறைக்கப்படவில்லை.

சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படவில்லை. இவர்கள் மிகவும் இரக்கமற்ற முறையில் முற்பிதாக்களையும், மதத் தலைவர்களையும் அமேற்றியுள்ளனர். இந்த மாயை தொடர அனுமதிக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles