” ஹிஷாலினியை சந்திப்பதற்கு அவரின் தாய் நான்கு தடவைகள் கொழும்பு சென்றுள்ளார். இரு தடவைகள் ரிஷாட்டின் வீட்டுக்கு அருகிலேயே சென்றுள்ளார். எனினும், சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஹிஷாலினி புத்தளம் சென்றுள்ளார் எனக் குறிப்பிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹிஷாலினியின் தாய் எம்மிடம் இந்த தகவலை வெளியிட்டார்.”
இவ்வாறு ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய.
“பொன்னையா என்ற புரோக்கரே ஹிஷாலினியை கொழும்புக்கு அழைத்துச்சென்றுள்ளார். மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபா. பொன்னையாவின் வங்கிக்கணக்குக்கே சம்பளம் வந்துள்ளது. 2 லட்சம் ரூபாவரை வழங்கப்பட்டுள்ளது.
ஹிஷாலினியை அழைத்துச்சென்றதற்காக பொன்னையாவுக்கு 5 ஆயிரம் ரூபாவும், ஆட்டோ சாரதிக்கு 5 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. பொன்னையாவின் மகளும் ரிஷாட்டின் வீட்டில் வேலை செய்துள்ளார்” எனவும் அவர் கூறினார்.
ஹிஷாலினி விவகாரம் தொடர்பில் மேலும் சில திடுக்கிடும் தகவல்களை மனித உரிமை செயற்பாட்டாளர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.