புறக்கோட்டை தீ விபத்து – இதுவரை 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு, புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறுபேர்வரை காயம் அடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.

இதுவரை அறுவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles