புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடக்காது!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை அறிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விசாரணைகளின் மூலம் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசிந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

குறித்த மூன்று வினாக்களுக்காக இலவச மதிப்பெண்களை வழங்கி, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles