புலம்பெயர் ஊழியர்களின் நலன் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

சர்வதேச புலம்பெயர் ஊழியர்களின் மீள் ஒருங்கிணைப்பில் பால்நிலையை ஒரு பிரச்சனையா?23 ஆவது சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் அனுட்டிக்கப்பட்ட நிலையில் ,புலம்பெயர் ஊழியர்கள் சம காலத்தில் எதிர் நோக்கி வரும் சவால்கள் தொடர்பாக ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளுக்கு அமைய கடந்த 2021 பெப்ரவரி மாதம் வரையான காலப் பகுதியில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை ஏற்றுக் கொள்ளும் பிரதான நாடுகளில் இருந்து 39461 ஊழியர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதன் போது ஒப்பந்தத்தை நிறைவு செய்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.ஆவணப்படுத்தப் படாத தொழிலாளர் இறுதியாகவே நாடு திரும்பும் நிலை உருவாகியது.

கொரோனா தொற்று நிலவிய  காலப் பகுதியில் சம்பளம் வழங்கப்படாமை, மேலதிக வேலை நேர கொடுப்பனவுகள் மறுக்கப்பட்டமை,ஊதியக் குறைப்பு மற்றும் ஊதியமின்றி பணி நீக்கம் செய்தல் போன்ற சவால்களை இலங்கை புலம்பெயர் ஊழியர்கள் விடயத்தில் எதிர்நோக்கியது.

புலம்பெயர் ஊழியர்களின் ஊதியம் தொழில் தருநர்களால் இக்காலப் பகுதியில் திருடப்பட்டது.

புலம்பெயர் ஊழியர்கள் நவீன அடிமைத் தனத்திற்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் தொழில், தங்குமிடம், உணவு மற்றும் சுகாதார வசதிகள் போன்ற தொழில் ஒப்பந்த சலுகைகள்  அனுசரணை நாடுகளில் மறுக்கப்பட்டன.இவர்களது சமூக அந்தஸ்து 2020,2021 களில் மறுக்கப்பட்டன.

இக்காலப்பகுதிக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி புலம்பெயர் ஊழியர்களாக செல்வோர் தொகை நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்துள்ளது வருகின்றது.

கடந்த காலங்களைப் போன்றே ஊதியத் திருட்டு, குறைந்த பட்சம் வாழ்க்கை ஊதியம் வழங்குதல்,மனித விற்பனை, தொழில் ஒப்பந்த மீறல்கள் என்பன இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

நாட்டை பொருளாதார  சரிவில் இருந்து மீட்டெடுக்க செல்லும் புலம்பெயர் ஊழியர்கள் நலன் குறித்து அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயத் தேவையாகும். நாடு திரும்பும் அனைத்து புலம்பெயர் ஊழியர்கள் மீள் ஒருங்கிணைப்பு செயற்பாட்டில் வகைப்படுத்தப்படாமல் சமமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்,  அவர்களுக்கான சமூக நலன்கள் மறுக்கப்படக் கூடாது,  வேலை வாய்ப்புகள், வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாடு குறித்தும் கவனம் செலுத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

அண்மை காலங்களில் புலம்பெயர் ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள அனைத்து விதமான தொழில் உரிமை மீறல்களில் இருந்தும் அவர்களை பாதுகாக்க அரசாங்கம் முறையான பொறிமுறையை வகுத்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்களின் நலன் பாதுகாக்கப்பட்டு, நாடு பொருளாதார மீட்சிப் பெற வழி ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.

ஏமாற்றி விடாமல் நாட்டில் உள்ள சமூகங்களின் மத்தியில் பால்நிலை சமத்துவத்தை உருவாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என பதுளையில் இயங்கி வரும் த பவர்  பவுண்டேஷனின் தலைவர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவிக்கின்றார்.

Related Articles

Latest Articles