புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக நுழைவாயில் திறப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.

 “Hope Gate” என்று பெயரிடப்பட்ட இந்த விசேட நுழைவாயில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளால் விமானநிலையத்தில் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாதென புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

துறைமுகங்கள்,கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

Related Articles

Latest Articles