புஸல்லாவை வகுவப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் (ரைலன்ட்) இன்றிரவு (26) ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்துள்ளது.
தொழிற்சாலைக்குள் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. எவருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

