புஸல்லாவை, வீடன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸல்லாவை நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்று, வீடன் பகுதியில் வைத்து மண்மேடுமீது சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிகளவானோர் பஸ்ஸில் பணம் செய்துள்ளனர். ‘புட்போர்டில்’ பயணம் செய்த இருவர் பலியாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் புஸல்லாவை மற்றும் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
