வழிபாட்டு தலங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் 50 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்ற தினத்திற்கு மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திறந்த வௌிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 75 பேர் கலந்துகொள்வதற்கும் குளிரூட்டப்பட்ட அறைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 75 பேர் கலந்துகொள்வதற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மீண்டும் பரவாதிருக்கும் வகையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.