பூண்டுலோயாவில் அம்மன் கோவில் உடைப்பு – தாலியும் கொள்ளை! (படங்கள்)

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் தோட்டத்திலுள்ள அம்மன் கோவில் உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலி, தங்க பொட்டு மற்றும் உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளன.

நேற்று இடம்பெற்றுள்ள இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில்
குறித்த தோட்டத்தின் கோவில் கமிட்டி உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட தலைவர்கள் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதற்கமைய பூண்டுலோயா பொலிஸார், பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் திருடர்களை கைது செய்யும், விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.

நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles