தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் பூனைகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்ட் பகுதியில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை பூனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விக்ரோறியாவில் உள்ள கிரேட்டர் பெண்டிகோ நகரம் போன்றவற்றில் உரிமையாளர்கள் பூனைகளை தங்கள் வீடு களில் வைத்திருக்கும்படியம் அல்லது அபராதம் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பெரா 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து அனைத்து பூனைகளையும் தடை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் அனைத்து பொது இடங்களி லும் பூனைகளை தடை செய்யும் திட்டத்துடன், பூனைகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தையும் அவுஸ்திரேலியா முன்னெடுத்து வருகிறது.
பெரும்பாலான வனவிலங்குகள் (ஆந்தை போன்ற பறவைகள்) பூனைகளால் கொல்லப்படுவதாகவும் அரியவகை வனவிலங்குகளை காப்பற்றும் நோக்கத்துடனேயே இந்த பூனைத்தடை கொண்டு வரப்படுவதாகவும் அவுஸ்திரேலிய மிருகவைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மிருக வைத்தியசாலை பணிப்பாளர் டீன் ஹக்ஸ்லி ஆண்டு தோறும் 5000 வனவிலங்குகள் பூனைகளின் தாக்குதலால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாக ABCயிடம் தெரிவித்துள்ளார்.பெரும்பாலான பூனை வளர்ப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றனர். அவுஸ்திரேலியாவில் பலர் பூனையை தமது செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.