பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்

கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற மூன்றாவது தடுப்பூசியாக பயன்படுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசியானது,  ஒமைக்ரொன் கொவிட் திரிபினால் ஏற்படக்கூடிய 85 சதவீதமான தீவிர நோய் நிலைமைகளை தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஆய்வுக்குழுவொன்று தமது ஆய்வுகள் ஊடாக கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசிமூலம் ஒமைக்ரொன் தொற்றாளர்கள் வைத்தியசாலை அனுமதிக்கப்படுவது கணிசமான அளவு குறைவடைவதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஒமைக்ரொன் வைரஸ் திரிபு வேகமாக பரவிவரும் பிரித்தானியாவில் இதுவரை 93,000 புதிய நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles