பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் போராட்டம்

வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் இன்று (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது.

வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் அதிகம் அங்கம் வகிக்கும் அமைப்பான ப்ரொடெக்ட் .அமைப்பின் ஆல் குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தலவாக்கலை கதிரேசன் ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பமான இப்பேரணி பேருந்து நிலையம் வரை சென்றடைந்தது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் வீட்டுப்பணிப்பெண்களும், கடைகளில் வேலை செய்யும் பெண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கான பொறிமுறையே அவசியம் என போராட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

 

Related Articles

Latest Articles