ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெர்லினின் பொதுக் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு நகர அதிகாரிகள் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளனர்.
திறந்தவெளி நீச்சல் குளம் ஒன்றில் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பெண் ஒருவரை வெளியேற சொன்ன பிறகு, அந்த பெண் எடுத்த சட்ட நடவடிக்கையை தொடர்ந்து இந்த தீர்ப்பு வந்துள்ளது.
பெண்ணின் வழக்கை விசாரித்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண் பாகுபாட்டிற்கு ஆளாகி இருப்பதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் மேலாடையின்றி செல்ல உரிமை பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்பினை Freikörperkultur என்று அழைக்கப்படும் “சுதந்திர உடல் கலாச்சார” சங்கமம் வரவேற்றுள்ளது. அதேவேளை பொது நிர்வாணத்தை பொருத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் கருதும் நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.