பெருந்தலைவர் தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று

 

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 112 ஆவது பிறந்த தினம் இன்று (30).

1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திததி பிறந்த அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 112 ஆவது பிறந்த தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்படுகின்றது.

சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்.

இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக செயற்பட்டார். முக்கிய பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். இலங்கையில் சிறந்ததொரு தேசிய தலைவராகவும் செயற்பட்டார்.

மலையக தமிழ் மக்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னின்று செயற்பட்ட தலைவர் .

Related Articles

Latest Articles